Friday, 6 February 2015

Niyum Yen Nanbanay - நீயும் என் நண்பனே

1.ரோட்டுல ஸ்பீட் ப்ரேகர் பாத்த உடனே சைடுல எங்கயாவது ஓட்டை இருக்குதான்னு பாத்து அதுல புவுந்து போவ நினச்சா நீயும் என் நண்பனே ..

2.அன்டர்டேக்கர் ஏழு முறை செத்து மீண்டும் உயிர்தெழுவான் என்று சிறு வயதில் நம்பியிருந்தால் நீயும் நண்பனே.


3.பல வித ஆங்கிள்னு சொன்னோன டேபிள்மேட் ஞாபகத்துக்கு வராம பலானது ஞாபகத்துக்கு வந்தா.... நீயும் என் நண்பனே...

4.புதுசா வாங்குன பொருள்ல உள்ள பிளாஸ்டிக் கவரை பிரிக்காமல் இருந்தால் நீயும் என் நண்பனே.

5.ஒவ்வொரு தடவை பிரௌசிங் செய்து முடிக்கும் போது ஹிஸ்டரியை க்ளியர் செய்தால் நீயும் என் நண்பனே.

6.பத்து மணிக்கு அடைக்க வேண்டிய பாரில் 9.45க்கே நேரம் 
ஆச்சு கெழம்பு என்று விரட்டியடிக்கும் அநீதியை கண்டு பால் போல் லேட்டாக பொங்காமல், பீர் போல் ஓபன் பண்ண உடன் பொங்கினால் நீயும் என் நண்பனே.

7.தோசையோ, இட்லியோ சாப்பிடும் போது தன் தட்டில் சட்னி, சாம்பார் தீர்ந்தவுடன், நண்பன் தட்டில் இருந்து தொட்டு சாப்பிட்டால் நீயும் என் நண்பனே.

8.மனைவியின் செல்போன் கால்களை அட்டெண்ட் செய்வதற்கு முன்னால் பரிட்சைக்கு தயாராவதைப் போல தயார் செய்தால் நீயும் என் நண்பனே.

9.அருமையான ஸ்டேட்டஸ் எல்லாம் பார்க்கும் போது,எனக்கு என் இதே மாதிரி தோணமாட்டாங்குது அப்படியென்று நினைத்தால், நீயும் என் நண்பனே.

10.இந்த மாதிரி கஷ்டப்பட்டு மண்டையப் பிச்சு ஸ்டேட்டஸ் எழுதி போட்ட அடுத்த கண்மே அடுத்தவன் ப்ரொஃபைலில் அதைக் கண்டு கடுப்பானால் நீயும் என் நண்பனே..

No comments:

Post a Comment

The Iron Lady in a Sari

On this solemn day, October 31, 2025, I humbly present my write-up in tribute to Indira Gandhi, commemorating the 41st anniversary of her t...